JaffnaHindu.Org

Jaffna Hindu College

Sunday
May 28th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home Hindu Culture Festivals Chithra Pournami

Chithra Pournami

E-mail Print PDF

Chithra Pournami, is the full moon of the month of Chithra (April-May), when the nakshatra Chithra (Virginis) is close to the moon. Chithra Pournami is a sacred day to remembering our mothers.

Austerities done on this day are supposed to please the mothers. On this day, people, who do not have mothers take an early bath and observe fasting (Viratham) in rememberance of their mothers. They also perform good deeds like helping/feeding somebody, especially poor mothers; sitting peacefully and praying to be cleansed of emotional toxins: anger, bitterness, revenge, jealousy. 

There’s also the legend that Indra, king of the celestials, once managed to offend Brahaspathi or Guru and was forced to come down to earth for expiation. He spotted a shivalingam under a kadamba tree and this struck him as so auspicious that he worshipped it with a golden lotus from a pond nearby. This feeling of piety and repentance in his mind, formalised externally as worship, redeemed him from his sin. The day was Chithra Pournami and the place where his penance was performed and accepted is Madurai. Indra is believed to have built a temple there and even today, in the great Madurai Meenakshi temple, Devendra Puja is observed on Chithra Pournami, while in the grand Vaishnava temples like Tirupati and Azhagarkoil, devotees bathe in the springs in which, says the Brahmanda Puranam, every holy river sends its punya on Chithra Pournami.

புண்ணிய சிந்தனைகளை வளர்க்கும் சித்திர பௌர்ணமி

அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.

தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.

பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.

சித்ரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும், பௌர்ணமி திதியும் அற்புதமாகக் கூடுவதால், அன்று ‘கடல் ஸ்நானம்’ செய்வது சிறப்புகளை வழங்கும். அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் கர்மவினைகளைக் கழித்தும், சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும், அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர் தயாராக இருப்பார்களாம்.

புராணத்தில் இந்நாளில் இந்திரன் சிவனை வணங்கி தீவினைகள் நீங்கப் பெற்றதாகப் கூறப்பட்டுள்ளது.

இந்நாளில் சித்திர புத்திரனார் விரதமும் வருகின்றது. ஒவ்வொரு வரும் செய்யும் புண்ணிய,பாவங்களைக் கணிப்பவர் சித்திர புத்திரனார் என்பது நம்பிக்கை. நாம் செய்யும் புண்ணிய, பாவங்கள் நமது சிறப்பின் பின் கணிக்கப்பட்டு அதற்கேற்ப மோட்சமோ, நரகமோ மறுபிறப்பில் பெறும் உருவமோ வழங்கப்படும் என்பது நம்பிக்கை. இதன்மூலம் நாம் தீயனவற்றைத் தவிர்க்க வழியேற்படுகின்றது. சித்திர புத்திரனாரின் தீர்ப்பின் படியே கர்மவினைகள் தொடரும் என்பதால் அவரை நினைத்து விரதமிருந்து வாழ்வைச் செம்மைப்படுத்தி நேரிய வழியில் செயற்பட மனப்பக்குவம் பெற இவ்விரதம் உதவுகின்றது.

மனதைச் செம்மைப்படுத்தி பகுத்தறிந்து தீயன தவிர்த்து, நல்லன நாடி செயற்பட உறுதி கொள்ளும் இச்சித்திர புத்திரனார் விரதமானது மனித குலம் வாழ வேண்டிய சீரிய வழியைச் செப்பனிடும் ஒரு முக்கிய விரதமாகவும் கொள்ளப்படுகின்றது.

மறைந்துவிட்ட தாயாரை நினைவிலிருத்தி வழிபாடு செய்யவும் வாழ்வைச் செம்மையிட்டுக் கொள்ளவும் சித்திரா பௌர்ணமி விரத நாள் மேன்மை பொருந்தியதாகின்றது.

இத்தினத்திலே ஆலயங்களிலே குறிப்பாக அம்மன் ஆலயங்களிலே சித்திரைக் கஞ்சி வார்ப்பும் இடம்பெறுகின்றது. தாயார் பசிபோக்கி வாழ்வளிப்பவர் அதை நினைவுகூர்ந்து பசிப்பிணியகல அம்மன் அருள் நாடி இச்சித்திரைக் கஞ்சிவார்ப்பு இடம்பெறுகின்றது. 

பௌர்ணமி விரதம் இருப்பவர்கள், சித்ரா பௌர்ணமி நாளில் மருக்கொழுந்து இலையால் சிவனை அர்ச்சிப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். சுவாமிக்கு அன்று வெண்பட்டாடை சமர்ப்பிக்க வேண்டும். பலாசு என்னும் ஒருவகை மரத்தில் மலரும் மலர்களால் ஆன மாலையை அணிவிப்பது நல்லது. அந்த மலர்களால் அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷம். சுத்த அன்னத்தைப் (வெறும் சாதத்தை) படைக்க வேண்டும். இந்த முறையில் சித்ரா பௌர்ணமி பூஜை செய்தால், லட்சுமிகடாட்சமும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று ஆகமங்கள் சொல்கின்றன.

பதினாறு பேறுகளில் முக்கிய இடத்தை வகிக்கும் நோயின்மையை அடைவதற்கும், சித்ரா பௌர்ணமிக்கும் சம்பந்தம் இருப்பதை சித்த புருஷர்கள் கண்டறிந்து உலகுக்கு நிரூபித்துள்ளனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சில இடங்களில், நிலவின் ஒளியில் பூமியிலிருந்து ஒருவிதமான உப்பு வெளிக்கிளம்பி வரும். அதன் பெயர் பூமிநாதம் எனப்படும். அந்த உப்பு, மருந்துகளுக்கு அதிகமான சக்தியை அளிக்கவல்லது என்பதால், மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதைக் கண்டுபிடித்தவர்கள் சித்தர்கள். ஆதலால் முன்காலத்தில் சித்ரா பௌர்ணமி, சித்தர் பௌர்ணமி என்றே வழங்கப்பட்டது.

Comments (0)

Write comment

smaller | bigger
security image
Write the displayed characters

busy
Last Updated ( Tuesday, 27 April 2010 02:57 )  

Photography

Sample image 

Hindu Mother 2012 - Jaffna Hindu College 2012.More Photos

OBA International

 

Mr.K.Skandamoorthy New President OBA UK

 

 

Mr.Srinivasan Mahendravarman New President OBA Sydney

 

 

Mr.Pon.Balendran New President OBA Canada

 

Mr.R.Sivaranjan New President OBA Norway