JaffnaHindu.Org

Jaffna Hindu College

Saturday
Feb 24th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home OBA Canada Kalaiyarasi 2012 was conducted grandiosely by JHCA Canada: Mr.C.Yogamoorthy was the Chief Guest

Kalaiyarasi 2012 was conducted grandiosely by JHCA Canada: Mr.C.Yogamoorthy was the Chief Guest

E-mail Print PDF

Markham Theatre of Performing Arts மண்டபத்தில் அக்டோபர் மாதம் ஆறாம் திகதி (06.10.2012) யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிச் சங்கத்தின் கலையரசி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

தமிழர் பாரம்பரியத்திற்கு ஏற்ப, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இவ்விழாவில் கனடா தேசியகீதத்தை வைஷாலி கிருஷ்ணானந்தனும், கல்லூரிக் கீதத்தை மைதிலி தயாநிதியும்  இசைத்தனர். அகவணக்கத்தைத் தொடர்ந்து உபதலைவர் கதிர்காமநாதன் அவர்கள்   வரவேற்புரையை வழங்கினார்.

பின்னர், பரதக்கலைச்சுடர் ரெபெக்கா ரவீந்திரன் வரவேற்பு நடனமொன்றினை வழங்கிப் பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மிதக்க வைத்தார்.

இவ்விழாவில் சங்கத் தலைவர் பொன்.பாலேந்திரா அவர்கள் தலைமை உரையாற்றினார்.  அவர் தம் உரையில், "யாழ். இந்துக்கல்லூரி தமிழர் தலைநிமிர் கழகமாகவும் கலைபயில் கழகமாகவும் தாயகத்தில் தொடர்ந்து திகழ்வதற்குப் பழைய மாணவர்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது" எனக் குறிப்பிட்டார்.  இந்துக்கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்-கனடா, கல்லூரிக்கு வழங்கிய உதவிகள் பற்றியும் விரிவாகக் கூறினார்.

தொடர்ந்து, நாட்டிய நர்த்தகி வனிதா குகேந்திரன் அவர்களின் நெறியாள்கையில், கலைக்கோயில் இளங்கலைஞர் ஒன்றியம் மரபினையும் (tradition), நவீனத்துவத்தையும் (modernity)  பிரதிபலிப்பவையும், வெவ்வேறு பண்பாடுகளுக்குரியவையுமான இரு நடனங்கள் சங்கமிக்கும் நடன நிகழ்ச்சி (fusion dance) ஒன்றினை மனங்கவர் வகையில் வழங்கியது.

அடுத்து, யாழினி ராஐகுலசிங்கம் தமிழ்த் தேசியத்துவ உணர்வினைப் பிரதிபலிக்கும் "இனி எங்கள் காலமென்று“ என்னும் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் பாடிய பாடலுக்கும், "பட்டினி கிடந்து பசியால் மெலிந்த" என்னும் கவிஞர் காசி ஆனந்தன் பாடலுக்கும் நடனம் ஆடி அவையோரை  மெய்ம்மறக்கச் செய்தார்.  

இசைக்கலைமணி கல்யாணி சுதர்சன் அவர்களின் ஏழிசை மதுர சபா மாணவர்கள் வழங்கிய வீணை இசை கேட்பதற்கு மிக ரம்மியமாக இருந்தது. இதன் பின்னர், கணபதி வணக்கத்துடன் ஆரம்பமான பவித்திரா லோகேஸ்வரனின் நடனம் பெண்ணொருத்தி  தன் வளர்ப்புப் புறாவுக்கு விடுதலை அளிப்பதை அழகாகச் சித்திரித்துக்  காட்டியது.

கலாசேத்திர நுண்கலைக் கல்லூரிப் பட்டதாரியான பூங்குழலி இளங்குமரனின் சாந்த நாயகி நாட்டியக்கோயில் மாணவர்கள் "மழை" என்னும் தொனிப்பொருளில் மிக அற்புதமாக நடனமாடினார்கள்.

கடந்த வருடத்தைப் போல, இவ் வருடமும் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் நாடகமொன்றினை வழங்கினர். நல்லம்மா குழந்தைவேலுவின் ஆக்கத்தில், தேவகி முனீஸ்வரராஜாவின் நெறியாள்கையில் அரங்கேறிய "இரு பக்கங்கள்" என்னும்  நாடகம்,  புலம் பெயர் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் இளம்தலைமுறையினரின் இனக்கலப்புத் திருமணம் தொடர்பான பிரச்சினையை மையமாகக் கொண்டது. அதில் நடித்தவர்கள் அனைவரும் தத்தம் பாத்திரங்களுக்கேற்ப சிறப்பாக நடித்திருந்தனர்.

மேலும் இந்நிகழ்வில் Mega Tuners குழுவினரின் பின்னணி இசையில்  Super Singer Juniors புகழ் மகிஷா, சரிகா  அவர்களுடன் கனேடிய கலைஞர்கள் இணந்து திரைப்படப் பாடல்களைப் பாடினார்கள். சபையோர் இசைமழையில் நனைந்து பரவசம் அடைந்தனர்.

ஐக்கிய இராச்சியத்தின் போக்குவரத்து எந்திரவியற்துறைக்கு ஆற்றிய சேவைக்காக, மேன்மைதங்கிய பிரித்தானிய மகாராணியினால் |பிரித்தானிய சாம்ராச்சியத்தின் அங்கத்தவர்| என்று கௌரவிக்கப்பட்ட நிறைவேற்றுப் பொறியியலாளர் திரு.செல்லையா யோகமூர்த்தி அவர்கள், இவ் விழாவில் பிரதம விருந்தினராக்க் கலந்துகொண்டார். அவர் தமது உரையில் யாழ் இந்துக்கல்லூரியில் தான் கல்வி பயின்றிராவிட்டால் இத்தகைய ஓர் உயர்ந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்றும்  பல்கலைக்கழகமே சென்றிருக்கமுடியாது என்றும் கூறி யாழ். இந்து அன்னையை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் யாழ் இந்துக்கல்லூரியின் சிறப்புகளைச் சபையோர் மனம்கொள்ளும் வண்ணம் கூறினார்.

யாழ் இந்துக்கல்லூரி பழையமாணவர் சங்கம் - கனடா நடாத்திய  மாணவர்களுக்கான கணிதம், பொதுஅறிவு, தமிழ் போட்டிகளில் அதி கூடிய புள்ளிகள் பெற்றவர்களுக்குப் பரிசில்களும், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் இவ்வைபவத்தில் வழங்கப்பட்டன. Super Singer Juniors புகழ் மகிஷா, சரிகா இருவரையும் கௌரவித்து பரிசில்கள் வழங்கப்பட்டன.  சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டஇ யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும், கனடாவில் மூன்று வணிக நிறுவனங்களின் உரிமையாளருமாகிய திரு. யோகா தியாகராஜாவும், அவரது பாரியாரும் கௌரவிக்கப்பட்டார்கள்.

சங்க உறுப்பினர் கணேஷ், யோர்க் பல்கலைக்கழக மாணவி காயித்திரி ஸ்ரீகதிர்காமநாதன் ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்கள்.

கலையரசி விழாவை சிறப்பாக நடாத்த உதவிய அனைவருக்கும், பார்வையாளருக்கும் சங்கச் செயலாளர் தயாநிதி அவர்கள் நன்றி கூறினார். விழா திட்டமிடப்பட்டவாறு, இரவு பதினொருமணியளவில் சுமுகமாக, இனிதே நிறைவேறியது.

Comments (0)

Write comment

smaller | bigger
security image
Write the displayed characters

busy
Last Updated ( Thursday, 18 October 2012 21:28 )  

Photography

Sample image 

Hindu Mother 2012 - Jaffna Hindu College 2012.More Photos

Pallikoodam

Facebook

OBA International

 

Mr.K.Skandamoorthy New President OBA UK

 

 

Mr.Srinivasan Mahendravarman New President OBA Sydney

 

 

Mr.Pon.Balendran New President OBA Canada

 

Mr.R.Sivaranjan New President OBA Norway